டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவிப்பு!
05.09.2024 08:05:02
கர்நாடகா டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது.
அதன்படி கர்நாடக மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அங்கு 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
மேலும் வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது