“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!”.

14.09.2026 07:53:38

முதல்​வர் விஜய்​யின் மகன் ஜேசன் சஞ்சய்,  இயக்​குந​ராக அறிமுகமாகும் படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன்,  ஃபரியா அப்​துல்​லா,  ராஜு சுந்​தரம் உள்பட பலர் நடித்​துள்​ளனர். லைகா தயாரித்​துள்ள இப்​படம்,  ஒக்டோபர். 2-ம் திகதி வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இப்படத்​தின் வெளி​யீட்​டுக்கு முந்​தைய நிகழ்ச்சி சேலத்​தில் நடை​பெற்​றது. இதில்,  படக்​குழு​வினர் பங்​கேற்​றனர். 

ஜேசன் சஞ்சய் பேசும்​போது ‘எல்​லோருக்​குமே வாழ்க்​கை​யில் ‘சிக்மா’ தருணம் இருந்​திருக்​கும். அதாவது நாம் ஏதாவது ஒரு பெரிய கஷ்டத்​தில் இருந்​திருப்​போம். அந்த நேரத்​தில் நாம் ஒரு முடிவை எடுப்​போம். அந்த முடிவு மொத்த வாழ்க்​கை​யை​யும் மாற்​றும். அப்​படி​யான ஒரு மனிதரின் வாழ்க்​கை​யில் நடக்​கும் கதை​தான் இந்த ‘சிக்​மா’ படம். அனை​வராலும் இந்​தப் படத்தை தொடர்​புபடுத்​திக்​கொள்ள முடி​யும் என்று நம்​பு​கிறேன்’ என்​றார்.சந்தீப் கிஷன் பேசும்​போது ‘இது போன்ற படம் அரி​தாகவே நடக்கும். இதற்கு முக்​கிய காரண​மாக இருந்த இயக்​குநர் சஞ்சய்க்கு என் அன்​பும் நன்​றி​யும். அவருக்​கென்று ஓர் அடையாளத்தை உரு​வாக்க வேண்​டும் என்று கடுமை​யாக உழைத்​திருக்​கிறார். ‘சிக்​மா’ ஜாலி​யான ஜென்​-ஸீ திரைப்​படம். நாம் நேசிக்​கும் ஒரு விஷ​யத்​தைப் பயமில்​லாமல் செய்​தால் நிச்சயம் வெற்றி கிடைக்​கும். ‘சிக்மா’ படத்​துக்​கும் நிச்​ச​யம் வெற்றி கிடைக்​கும்’ என்​றார்.