ஹாய்!. முதல் நாள் வசூல் அப்டேட்!.
29.08.2026 12:56:22
நடிகர் கவினுக்கு ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் போன்ற படங்கள் கை கொடுக்காத நிலையில் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவான ஹாய் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்ததோடு படத்தையும் தயாரித்திருந்தார் நயன்தாரா. ராதிகா, பிரபு, பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ஹாய் திரைப்படம் உருவாகியிருந்தது. இந்த படம் கண்டிப்பாக தனக்கு ஒரு வெற்றிப் படமாக அமையும் என கவின் நம்பி காத்துக் கொண்டிருக்கிறார்..
இந்நிலையில் இந்த படம் நேற்று வெளியானது. இந்நிலையில் முதல் நாளில் இந்த திரைப்படம் 1.23 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஆனாலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் வார இறுதியில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது..