ETR.FM

சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி

07.05.2022 11:44 1 நிமிட வாசிப்பு
சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி

வெண்ணிலா கபடிக்குழு, பாண்டிநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை டைரக்டு செய்த சுசீந்திரன், அடுத்து இயக்கும் புதிய படத்துக்கு ‘வள்ளி மயில்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா, ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கிறார்கள்.

ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘ஜதி ரத்னலு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த பரியா அப்துல்லா, ‘வள்ளி மயில்’ ஆக நடிக்கிறார். ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமய்யா, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘வள்ளி மயில்’ படத்திற்கு இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை விஜய் கே.சக்கரவர்த்தி கவனிக்க படத்தொகுப்பை ஆண்டனி

 மேற்கொள்கிறார். படத்தின் கதை 1980-களில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்