ETR.FM

மீண்டும் சுஜா வருணி

02.12.2021 06:23 1 நிமிட வாசிப்பு
மீண்டும் சுஜா வருணி

நடிகர் வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் த்ருஷ்யம் 2. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

திருமணம், குழந்தை பிறப்பு என சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த சுஜா சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருக்கிறார். த்ருஷ்யம் 2 படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் மீண்டும் நடிக்கக்கூடும் என தெரிய வருகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்