ETR.FM

‘ஒன் 2 ஒன்’ படத்தில் சுந்தர் சி. ஜோடி, ராகினி திவேதி

21.01.2022 11:03 1 நிமிட வாசிப்பு
‘ஒன் 2 ஒன்’ படத்தில் சுந்தர் சி. ஜோடி, ராகினி திவேதி

சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கிறார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தவர். தமிழில் இவர் நடிக்கும் 3-வது படம், இது.

விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். வில்லன் வேடத்தில் நடிக்க ஒரு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்