'சத்தியவான் சாவித்திரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
17.06.2026 13:55:15
|
முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள திரைப்படம் 'சத்தியவான் சாவித்திரி'. இப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து இயக்குநரும் நடிகருமான மிஸ்கின் நடித்துள்ளார். இப்படத்தை பிரவீன் எஸ். விஜய் என்பவர் இயக்க, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் Drumsticks Productions இணைந்து தயாரித்துள்ளன. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார். |
|
'சத்தியவான் சாவித்திரி' திரைப்படத்தின் First லுக் வந்த நாளில் இருந்தே இப்படம் எப்போது வெளிவரும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 24-ஆம் தேதி 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |