பாகிஸ்தானில் சிலிண்டர் வெடிப்பு.

08.06.2025 14:07:54

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 02பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். .

தகவலறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.