|
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் சேயோன். இப்படத்தை கமல் ஹாசன் தயாரிப்பதை தாண்டி தற்போது அதில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. தாய் கிழவி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் சேயோன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக பிரபல சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வருகிறார். மேலும், சீமான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். |
|
தயாரிப்பை தாண்டி சேயோன் திரைப்படத்தில் நடிகராகவும் களமிறங்கியுள்ளாராம் கமல் ஹாசன். அதுவும், இப்படத்தில் விருமாண்டி கதாபாத்திரத்தில் கமல் நடிப்பதாக கூறப்படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இவருடைய கதாபாத்திரத்தின் என்ட்ரி இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சேயோன் திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானபோது, சிவகார்த்திகேயன் கையில் வித்தியாசமான வாட்ச் ஒன்று கட்டியிருந்தார். இந்த வாட்ச் விருமாண்டி திரைப்படத்தில் கமல் ஹாசன் அணிந்திருந்த வாட்ச் ஆகும். அப்போதே, கமல் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்கிற பேச்சு திரை வட்டாரத்தில் அடிபட்டது. தற்போது அதனை மூத்த பத்திரிகையாளர் அந்தணன் youtube சேனலில் தெரிவித்திருக்கிறார். |