லால் சலாம் படத்திற்கு கூட்டமே இல்லை

09.02.2024 13:00:08

இன்று ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 



தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
 

இன்று இந்த படம் வெளியாகியுள்ள நிலையில் பெரும்பாலான தியேட்டர்களில் ரஜினிகாந்த் படத்திற்கான முதல் நாள் கொண்டாட்டங்கள் சுத்தமாக இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கிய நகரங்களில் உள்ள பிரதான தியேட்டர்கள் தவிர்த்து பல பகுதிகளில் திரையரங்குகளில் சீட் புக்கிங் முக்கால்வாசி கூட தொடவில்லை என கூறப்படுகிறது.