ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் ஷங்கர்!.

29.08.2026 12:47:41

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் படங்களை முதன் முதலில் இயக்கியது இவர்தான். இவர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரிய வெற்றியை பெற்றது..

அதேநேரம் சமீப காலமாக அவர் இயக்கி வரும் படங்கள் பெரிய வெற்றியை கொடுப்பதில்லை. அவர் கடைசியாக இயக்கிய இந்தியன் 2, மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தன.  எனவே கேம் சேஞ்சருக்கு பின் ஷங்கர் இதுவரை எந்த ஒரு புதிய படத்தையும் இயக்கவில்லை..

அதேநேரம் வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டிருக்கிறார்.. ஆனால், அது தாமதமாகும் என்பதால் தற்போது ஒரு புதிய படத்தை இயக்க்கும் முடிவில் அவர் இருக்கிறார்..

இந்நிலையில்தான், ஏ.ஆர் முருகதாஸ் எழுதியுள்ள ஒரு கதையை வாங்கி ஷங்கர் இயக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.. ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதையைத்தான் ஷங்கர் கேம் சேஞ்சராக எடுத்தார். அது தோல்வியடைந்த நிலையில் முருகதாஸின் கதை அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..