லோகேஷுடன் ‘ரோலக்ஸ்’ படம் எப்போது?!.

04.08.2026 14:06:05

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். பல வருடங்களுக்கு முன்பு கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் சூர்யா கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். அது இரண்டு நிமிட காட்சி என்றாலும் சுர்யா ரசிகர்களுக்கு அது சூப்பர் ட்ரீட்டாக  அமைந்தது.

ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு சூர்யாவை வைத்து ரோலக்ஸ் என ஒரு தனிப்படத்தையே இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்தார். ஆனால் அது தற்போது வரை துவங்கப்படவில்லை.

இந்நிலையில் ரோலக்ஸ் படம் பற்றி கருத்து தெரிவித்த சூர்யா ‘லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் படத்திற்கான கதையை எழுதி வருகிறார்.. எனவே, இந்த படம் எப்போது தொடங்கும் என்பது எனக்கே தெரியாது.. அதற்கான சரியான நேரம் வரவேண்டும்’ என கூறியிருக்கிறார்.