கடவுளாக நடிக்கும் ரவி மோகன்!.

14.09.2026 07:50:08

கோலிவுட்டில் முக்கிய நடிகரில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். ஜெயம் படத்தில் நடிக்க துவங்கிய ரவி அதன்பின் பல படங்களிலும் நடித்து விட்டார்.

கடந்த சில வருடங்களாகவே தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதோடு, தன் மனைவி மீது ரவியும், ரவி மோகன் மீது அவரின் மனைவி ஆர்த்தியும் மாறி மாறி புகார் கூறி வருகிறார்கள். இது ஒரு தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.
ஒருபக்கம் ரவி மோகன் பாடகி கெனிஷா என்பவருடன் நெருக்கமாக இருக்கிறார். யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ரவி மோகன் இயக்கி வரும் புதிய படத்திற்கு கென்னிஷா இசையமைத்து வருகிறார்..


இந்நிலையில் ரவி மோகன் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.  இந்த திரைப்படத்திற்கு வட்டி காசலவாடா என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் மஞ்சு மனோஜ் என்பவர் ஹீரோவாக நடிக்க ரவி மோகன் கடவுள் வெங்கடாசலபதி வேடத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது.