ETR.FM

பீகாரில் வெப்பநிலை அதிகரிப்பால் 19 பேர் உயிரிழப்பு!

31.05.2024 07:58 1 நிமிட வாசிப்பு
பீகாரில் வெப்பநிலை அதிகரிப்பால் 19 பேர் உயிரிழப்பு!

பீகாரில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுமார் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 40° Cக்கும் மேல் வெப்பம் அதிகரித்துள்ளதால் பலரும் வெப்ப வாதத்தால் (ஹீட் ஸ்ட்ரோக்கால்)  பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்