ஜனநாயகன் சென்சார் வழக்கு தீர்ப்பு தேதி வெளியானது!

24.01.2026 12:33:03

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து சிக்கலில் தான் இருக்கிறது. சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பொங்கல் ரிலீஸில் இருந்து படம் தள்ளிப்போனது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு ஜனவரி 27ம் தேதி காலை 10.30 மணிக்கு வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. தீர்ப்பு வந்தால் தான் படம் ரிலீஸ் ஆகுமா, அல்லது மேலும் தாமதம் ஆகுமா என்பது தெரியவரும். தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதன் பிறகு ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக அனுமதி கிடைக்காது என்றும், தேர்தலுக்கு பிறகே ரிலீஸ் செய்ய முடியும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.