ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த மமிதா!
|
கடந்த வாரம் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. ஜனநாயகன் திரைப்படத்தின் மூலம் இந்த ஆண்டு தனது முதல் வெற்றியை மமிதா பைஜூ பதிவு செய்தார். இதை தொடர்ந்து வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடந்த வாரம் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் மூலம் தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். |
|
இயக்குநர் இப்படத்தை கிரிஷ் ஏ.டி என்பவர் இயக்க, இப்படத்தில் மமிதாவுடன் இணைந்து நிவின் பாலி நடித்துள்ளார். பீல் குட் திரைப்படமாக உருவாகி வெளியாகியுள்ள பெத்லகேம் குடும்ப யூனிட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். |