தேர்தல் ஆணையர் நியமன வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

13.03.2024 08:26:32

தேர்தல் ஆணையர் நியமன வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. புதிய தேர்தல் ஆணைய சட்டப்படி தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யக்கூடாது என மனு தாக்கல் செய்யபட்டிருந்தது. 2023 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தலைமை நீதிபதியையும் தேர்வு குழுவில் இடம்பெற செய்து ஆணையர்களை நியமிக்க கோரிக்கை வைக்கபட்டது.