Kung Fu Hustle பட நடிகர் மரணம்!

20.01.2026 14:11:43

90ஸ் கிட்ஸ் மனதில் இடம்பிடித்த வெளிநாட்டு திரைப்படங்களில் ஒன்று Kung Fu Hustle. உலக புகழ்பெற்ற நடிகர் Stephen Chow இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் தி பீஸ்ட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் Siu-Lung Leung. இவர் The Legendary Fok, Call Me Dragon போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், Kung Fu Hustle படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் உலகளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 77 வயதாகும் நடிகர் Siu-Lung Leung கடந்த ஜனவரி 14ஆம் தேதி காலமானார். இவருடைய மரணம் பெரும் துயரத்தை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் கொடுத்துள்ளது. ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.