அந்த நடிகருடன் இணையும் சிறுத்தை சிவா!.
கார்த்தியை வைத்து சிறுத்தை என்கிற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன் பின் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கினார்.
இதில் விவேகம் படத்தை தவிர மற்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அதேநேரம் ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாத்த, சூர்யாவை வைத்து கங்குவா ஆகிய படங்கள் தோல்வி படங்களாக மாறியது. இதன் காரணமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க எந்த பெரிய நடிகர்களும் முன் வரவில்லை..
ஒருபக்கம் அஜித்தை வைத்து அவர் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதை அஜித் ரசிகர்களே விரும்பவில்லை. ஒரு வழியாக தற்போது தனுசை வைத்து ஒரு படத்தை சிறுத்தை சிவா இயக்கவிருக்கிறார். ஓம் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பார் மாதம் துவங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, டிசம்பர் மாதம் தனுஷ் - சிவா படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.