ETR.FM

வெளியானது மக்காமிஷி

21.07.2024 07:00 1 நிமிட வாசிப்பு
வெளியானது மக்காமிஷி

ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிரதர் படத்தின் முதல் பாடல் “மக்காமிஷி” தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை பால் டப்பா பாடியுள்ளார். மக்காமிஷி என்ற வார்த்தைக்கு கெத்து, திமிரு, ஸ்வாக் என்று அர்த்தம். இப்பாடம் ஒரு ஜாலியான வைப் செய்யும் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடலின் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்