தனுஷ்-ன் 51வது பட ஃபர்ஸ்ட்லுக் பற்றிய தகவல்!

08.03.2024 07:00:00

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கேப்டன் மில்லர் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராயன் என்ற தலைப்பில் அவரது 50வது படத்தை அவரே  இயக்கி நடிக்கிறார். 
 

இந்த நிலையில், தனுஷ் நடிப்பில் தெலுங்கில் நேரடியாக உருவான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் 51 படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்  ஆரம்பமாகி நடந்து வருகிறது.

 

இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து,  ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடிக்கின்றனர்.  இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில்,  இந்த படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மஹாசிவராத்திரி அன்று வெளியிட வாய்ப்புள்ளதாக   தகவல் வெளியாகிறது.
 

எதோ சென்டிமென்ட் காரணமாக இப்பட முதல் லுக் போஸ்டர் வரும் சிவராத்திரி  தினத்தன்று வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.