ETR.FM

வசூல் வேட்டையை துவங்கிய வேட்டையன்!

23.09.2024 07:10 1 நிமிட வாசிப்பு
வசூல் வேட்டையை துவங்கிய வேட்டையன்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பின் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் ஜெய் பீம் மற்றும் கூட்டத்தில் ஒருத்தன் எனும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

   

வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய சினிமாவின் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழில் இருந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், மலையாள திரையுலக சேர்ந்த மஞ்சு வாரியர், பகத் பாசில், தெலுங்கில் இருந்து ராணா மற்றும் இந்தியில் இருந்து அமிதாப் பச்சன் என பலரும் வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.

இந்த நிலையில் வேட்டையன் படத்திற்காக வெளிநாட்டில் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. இதில் இதுவரை ரூ. 8 லட்சத்திற்கும் மேல் வசூல் குவிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்