ETR.FM

தனுஷ் நடித்துள்ள 'ஓம்’ படத்தின் ரிலீஸ் திகதியில் மாற்றம்!

23.09.2026 15:25 1 நிமிட வாசிப்பு
தனுஷ் நடித்துள்ள 'ஓம்’ படத்தின் ரிலீஸ் திகதியில் மாற்றம்!

தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் திகதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் திகதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாளே ‘ஓம்’ திரைப்படம் வெளியாகிறது. இதனால் இரு படங்களுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக ‘ஓம்’ படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ‘ஓம்’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி அல்லது டிசம்பர் 2ஆம் திகதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வெளியீட்டு திகதி மாற்றம் தொடர்பாக படக்குழு தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்