ETR.FM

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்- சோனியா காந்தி கண்டனம்

08.12.2021 06:09 1 நிமிட வாசிப்பு
12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்- சோனியா காந்தி கண்டனம்

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது அவை நடவடிக்கைகளில் இடையூறு செய்ததாகவும், அவை மரபுகளை மீறிவிட்டதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள், சிவசேனா கட்சி 2 பேர், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் என மொத்தம் 12 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்