ETR.FM

2031ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் தான்.

17.11.2026 15:40 2 நிமிட வாசிப்பு
2031ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் தான்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, எதிர்வரும் முக்கிய ஐசிசி தொடர்களை நடத்தும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதன்படி, 2029-ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியையும், 2031-ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியையும் இந்தியா நடத்தவுள்ளது. இதற்கு ஐசிசி முறையான ஒப்புதலை வழங்கியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, 2029 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 9 முதல் 28 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. கடைசியாக கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியா இந்தத் தொடரை நடத்திய நிலையில், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், 2031 உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடர் அக்டோபர் 9 முதல் நவம்பர் 23 வரை திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2023 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்திய இந்தியா, மீண்டும் இந்த மெகா தொடரை நடத்துவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

2035 வரை நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களின் கால அட்டவணையை ஐசிசி உறுதி செய்துள்ள நிலையில், இந்திய மண்ணில் அடுத்தடுத்து உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் திருவிழாக்கள் அரங்கேற உள்ளது விளையாட்டு உலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்