ETR.FM

மீண்டும் விஜய் பட இயக்குனரை தேர்வு செய்த சல்மான் கான்!

01.04.2026 08:00 1 நிமிட வாசிப்பு
மீண்டும் விஜய் பட இயக்குனரை தேர்வு செய்த சல்மான் கான்!

ல்மான் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் கடந்த பல வருடங்களாக மிகப்பெரிய ஹிட் கொடுக்கமுடியாமல் திணறி வருகிறார். அவர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சிக்கந்தர் படம் கடந்த வருடம் வெளியாகி இருந்தது. அந்த படம் படுதோல்வியை தான் சந்தித்தது. தோல்விக்கு என்ன காரணம் என சல்மான் கான் மற்றும் முருகதாஸ் இருவரும் மாறி மாறி புகார் சொன்னதும் சர்ச்சை ஆனது.

இந்நிலையில் சல்மான் கான் மீண்டும் ஒரு விஜய் பட இயக்குனரை தேர்வு செய்து அடுத்து நடிக்க இருக்கிறார். வாரிசு படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி தான் தற்போது சல்மான் கானை இயக்க போகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தான் இந்த படத்தையும் தயாரிக்க போகிறார்.

      
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்