ETR.FM

எம்ஜிஆர் யுத்தியை கையில் எடுக்கும் விஜய்!?

29.01.2025 08:05 1 நிமிட வாசிப்பு
எம்ஜிஆர் யுத்தியை கையில் எடுக்கும் விஜய்!?

நடிகர் விஜய் தான் கடைசியாக நடிக்கும் படத்திற்கு ‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதில் பல அரசியல் காட்சிகள் இருக்கும் என பேசிக் கொள்ளப்படுகிறது.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில் திரைப்படங்கள் இனி நடிக்கப் போவதில்லை என அறிவித்தார். அதனால் அவரது 69வது மற்றும் கடைசி படமான ‘ஜனநாயகன்’ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினத்தில் வெளியான நிலையில், அன்று மாலையே செகண்ட் லுக் போஸ்டரும் வெளியானது. அதில் விஜய், எம்ஜிஆர் போல கையில் சாட்டையோடு காட்சியளித்த நிலையில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் படத்திலும் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்’ பாடல் பயன்படுத்தப்பட இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. அந்த காலங்களில் எம்ஜிஆர் படங்களில் இடம்பெற்ற இதுப்போன்ற புரட்சிகரமான பாடல்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பாடல் இந்த படத்தில் இடம் பெற்றால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்