ETR.FM

ஆரம்பமாகப்போகும் ஜீ தமிழின் Dance Jodi Dance புது சீசன்!

07.06.2026 11:18 1 நிமிட வாசிப்பு
ஆரம்பமாகப்போகும் ஜீ தமிழின் Dance Jodi Dance புது சீசன்!

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ். சன் டிவி சீரியல்களிலும், விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் கலக்கிவரும் நிலையில் ஜீ தமிழ் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என இரண்டிலும் கலக்கி வருகிறார்கள். ஜீ தமிழ் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்புகிறார்கள், கொஞ்சம் கொஞ்சம் முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இணையாக டிஆர்பியையும் பெற்று வருகிறார்கள்.

தற்போது ஜீ தமிழ் ரசிகர்களுக்கு சீரியலை தாண்டி ரியாலிட்டி ஷோ குறித்த ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய Dance Jodi Dance ரியாலிட்டி ஷோவின் புதிய சீசன் விரைவில் தொடங்க உள்ளதாம்.

வரும் ஜுன் 13ம் தேதி முதல் இரவு 7 மணிக்கு Dance Jodi Dance புதிய சீசன் வரப்போகிறது.

இந்த புதிய சீசனின் நடுவர்களாக நாம் சினிமாவில் பார்த்து ரசித்த ஹிட் ஜோடியான பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடுவர்களாக களமிறங்க உள்ளார்கள். அதற்கான சூப்பர் புரொமோவும் வெளியாகியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்