ETR.FM

தேர்தல் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளில் மீண்டும் தமிழகம் வரும் அமித்ஷா பங்கேற்பதாக தகவல்

03.03.2021 09:08 1 நிமிட வாசிப்பு
தேர்தல் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளில் மீண்டும் தமிழகம் வரும் அமித்ஷா பங்கேற்பதாக தகவல்

உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் எதிர்வரும் 7 ஆம் திகதி  மீண்டும் தமிழகம் வருகைத்தரவுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 12ம் திகதி ஆரம்பிக்கிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகளிடையே கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் வரும் 7 ம் திகதி மீண்டும் தமிழகம் வருகை தரும் அமித்ஷா, தேர்தல் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக கூட்டணியில் பா.ஜ.க போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சட்டசபைக்கான தொகுதி எண்ணிக்கை குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்