கவுண்டமணியுடனான காம்போ!

22.01.2026 14:14:28

தமிழ் சினிமாவில் லொள்ளு பிடிச்ச நடிகர் என்றாலே அது கவுண்டமணி. அவரின் காமெடி படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்க்கும். அதுவும் செந்தில் கவுண்டமணி காம்போனால் இன்னும் ப்ளஸ்தான். செந்தில் அடி வாங்குவதும் கவுண்டமணி அடி கொடுப்பதும் 90கள் காலகட்டத்தில் இவர்களின் லூட்டி அடங்காத ஒன்றாகத்தான் இருந்தது.

செந்திலுடன் மட்டும் கிடையாது. முன்னணி ஹீரோக்களுடனும் கவுண்டமணியின் காம்போ ஹிட் அடித்திருக்கிறது. குறிப்பாக கார்த்திக், சத்யராஜுடன் கவுண்டமணி சேர்ந்து செய்த காமெடி இன்று வரை பார்ப்பவர்களை வயிறு குலுங்க வைக்கும். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இவருடைய காமெடிதான் ஹைலைட்டே. அதே போல் மேட்டுக்குடி படத்திலும் ஒரு ரொமாண்டிக் லுக் விடுவாரே! இந்து இந்து என நக்மாவை சுற்றி சுற்றி வந்து காதல் செய்யும் போதும் நகைச்சுவையாக இருக்கும்.

சத்யராஜுடன் நடிகன் படத்தில் இவர் செய்த அலப்பறை இருக்கே! சொல்லப் போனால் பி. வாசு இயக்கத்தில் மட்டும் கவுண்டமணி 24 படங்களில் நடித்துள்ளார். அத்தனை படங்களிலுமே கவுண்டமணி இரண்டாவது ஹீரோவாகத்தான் வருவார். அப்படி பி,வாசு இயக்கத்தில் கவுண்டமணி நடித்த ஒரு படம்தான் மன்னன்.

ரஜினி ஹீரோ. விஜயசாந்தி ஹீரோயின். அதில் தியேட்டரில் ரஜினியும் கவுண்டமணியும் ஓடி ஒளிந்து கொள்ளும் போது விஜயசாந்தியிடம் மாட்டிக் கொள்வார்கள். அதை சமாளிக்க கவுண்டமணியின் ரியாக்‌ஷன் மிகவும் ரசிக்க வைத்தது. அதே போல்  தொழிலாளர்களுக்காக உண்ணாவிரதமும் இருப்பார்கள்.