ETR.FM

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்

15.11.2024 07:11 2 நிமிட வாசிப்பு
’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ஏற்கனவே கடந்த தீபாவளி அன்று வெளியான அமரன் படம் இன்னும் பல முக்கிய திரையரங்களில் ஓடிக் கொண்டிருப்பதாகவும், ‘கங்குவா’ ரிலீஸ் ஆனாலும் அமரன் படத்தை தூக்க முடியாது என்ற திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த நிலையில், இன்று சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் நிலையில், சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் இன்னும் அமரன் படம் ஓடிக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

குறிப்பாக சென்னை சங்கம், தேவி தியேட்டர்களில் நான்கு காட்சிகள் அமரன் திரைப்படம் என்று திரையிடப்படுவதாகவும், சென்னை வடபழனி கமலா சினிமா தியேட்டரில் கூட மூன்று காட்சிகள் திரையிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உதயம், காசி உள்ளிட்ட தியேட்டர்களிலும் அமரன் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது

அமரன் திரைப்படம் மூன்றாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பாதி தியேட்டருக்கும் அதிகமாக டிக்கெட்டுகள் புக் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்