7 நாள் முடிவில் The Odyssey செய்துள்ள வசூல்!

25.07.2026 07:50:36

உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கவனிக்கும் ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் தான் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 17ம் தேதி வெளியான திரைப்படம் தான் தி ஓடிசி. கிரேக்க காவியம் ஓமரின் கவிதையை மையமாக கொண்டு இப்படம் தயாராகியுள்ளது, படம் முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவால் எடுக்கப்பட்டிருக்கிறது.

    

 

ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேலான அதிக பட்ஜெட்டில் உருவான இந்த தி ஓடிசி படம் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இப்படம் 7 நாள் முடிவில் ரூ. 3500 கோடிக்கு மேலாக உலகம் முழுவதும் இதுவரை வசூல் வேட்டை செய்துள்ளது.