இயக்குநர் வினோத்துடன் ஜேசன் சஞ்சய் திடீர் சந்திப்பு!
முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், பிரபல இயக்குநர் எச்.வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தச் சந்திப்பின்போது, வெறும் இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் களம் இறங்க வேண்டும் என சஞ்சய்க்கு வினோத் ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இத்திரைப்படம் எதிர்வரும் 31ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இருப்பினும், இந்தச் சந்திப்பு சஞ்சய்யின் 'சிக்மா' திரைப்படம் தொடா்பானதா அல்லது முதலமைச்சர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பானதா என்பது குறித்த உத்தியோகபூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.