ETR.FM

இன்று நடப்பாண்டிற்கான முதல் சந்திரக்கிரகணம் : வானில் தோன்றும் இரத்த நிலா !

26.05.2021 13:38 1 நிமிட வாசிப்பு
இன்று நடப்பாண்டிற்கான முதல் சந்திரக்கிரகணம்  : வானில் தோன்றும் இரத்த நிலா !

இந்த ஆண்டின் முதல் சந்திரக்கிரகணம் இன்று (புதன்கிழமை) நிகழவுள்ளது. இதன்போது வானில் “சூப்பர் மூன் மற்றும் பிளட்மூன்” எனப்படும் இரத்த நிலா தோன்றும் என வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நடப்பாண்டிற்கான சந்திர கிரகணம் இன்று மாலை 3:15 மணியளவில் வானில் தோன்றும் அதேவேளை மாலை 6:23 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாலை 4:39 மணி முதல் 4:58 மணிவரை முழு சந்திர கிரகணம் தெரியகூடியதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் சில பகுதிகளான ஒடிசா, அந்தமான், நிக்கோபார் தீவின் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் அரை சத்திரக்கிரகணத்தை பார்க்கக்கூடியதாக இருக்கும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்