"நான் விஜய் சார் வெறியன்" - சாய் அபயங்கார்!
01.05.2026 07:49:00
|
தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் என்றால் அது சாய் அபயங்கார் தான். அவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கின்றன. அவர் இசையமைத்த ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் அவருக்கு எக்கச்சட்ட பட வாய்ப்புகள் குவிந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம். |
|
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் "நான் விஜய் சார் வெறியன்" என கூறி இருக்கிறார் சாய் அபயங்கார். "அவருக்காக இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவருக்கு மாஸாக பல விதமான genreகளில், சச்சின் போன்ற படங்களுக்கு கூட இசையமைக்க வேண்டும் என விரும்பினேன்" என அவர் கூறியுள்ளார். விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகிவிட்டதால், சாய் அப்யங்கரின் ஆசை நிறைவேறாமல் போயிருக்கிறது. |