4 புதிய தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்?!
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கோலிவுட்டில் இந்த வாரம் 4 புதிய திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.
முதல் படமாக நயன்தாராவுடன் இணைந்து கவின் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹாய்’ இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு எடவன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை நயன்தாரா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில படங்கள் கவினுக்கு வெற்றியை கொடுக்காத நிலையில் இந்த படம் தனக்கு வெற்றி படமாக அமையும் என நம்பி கவின் காத்திருக்கிறார்..
அடுத்து அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள ஒன்ஸ்மோர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பிரிமியர் ஷோ பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக சொல்வதால் இந்த படமும் ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து புதுமுக நடிகர் ராஜன் தேஜஸ்வர், இரா அகர்வால் நடித்துள்ள அமரம் திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்த படத்தை திரு அருள் கிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார்..
மேலும், கேஜிஎப் பட புகழ் யாஷ் நடிப்பில் உருவான டாக்சிக் திரைப்படமும் கடந்த புதன் கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்திற்கும் இந்த மூன்று படங்களுக்கும் இடையே தான் பாக்ஸ் ஆபிஸில் போட்டி நடக்கவிருக்கிறது. எந்த படம் மக்களின் ஆதரவை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.