ETR.FM

இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடைவிதித்த டிரம்ப்.

05.11.2026 08:49 1 நிமிட வாசிப்பு
இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடைவிதித்த டிரம்ப்.

ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும் இஸ்ரலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானியின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.

இதில் ஆத்திரமடைந்த ஈரான் அமெரிக்காவுக்கு உதவும் சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், அபுதாபி போன்ற வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இது அமெரிக்காவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியது..

இதன் காரணமாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருளில் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் காரணமாகத்தான் சமீபத்தில் நடந்த அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்பின் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், ஈரானின் ரகசிய எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவி செய்ததாக இந்திய நிறுவனங்கள் மற்றும் சில தனி நபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருக்கிறது..

Oceaniek Technologies, Aryavart Ship Management உள்ளிட்ட 9 நிறுவனங்கள் மற்றும் 4 தனி நபர்கள் மீது டிரம்ப் பொருளாதார தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE மண்வாசனை