‘இருமுடி கட்டு’ திரைப்படம் ரூ.200 கோடி வசூல்.
07.09.2026 08:31:10
நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘இருமுடி கட்டு’ திரைப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சிவ நிர்வாணா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சாய் குமார் மற்றும் பேபி நக்சத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படம் கடந்த 21ஆம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.
வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 12 நாட்களில் ரூ.200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.