ETR.FM

தமிழக அரசின் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்!

16.11.2026 14:44 1 நிமிட வாசிப்பு
தமிழக அரசின் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்!

கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 

இத்திட்டத்திற்காக ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 100 தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் முதல் கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 30,000 பெண்கள் பயனடைவார்கள்.

ஒவ்வொரு பயனாளிக்கும் நூறு சதவீத மானியத்தில் தலா 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. ஆடுகளின் விலை, அவற்றுக்கான இரண்டு வருட காப்பீடு, தீவனம் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான ஊக்கத்தொகை என அனைத்து

ச் செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்கிறது. 

கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு கொண்டுவந்துள்

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்