ETR.FM

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!

29.05.2026 07:49 1 நிமிட வாசிப்பு
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த கருப்பு திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை ரூ. 280 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கருப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்காக தான். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பார்த்து அவர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்