சேயோனில் சீமான்!.

09.09.2026 08:13:49

ராதிகா சரத்குமார், சிங்கம்புலி உள்ளிட்ட பலரையும் வைத்து தாய் கிழவி என்கிற திரைப்படத்தை இயக்கியவர் சிவக்குமார் முருகேசன். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்றது. இந்த படத்தை வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரித்திருந்தாலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டார்..
 

இந்த படம் வெற்றிப் படமாக அமைந்தது. சிவக்குமார் முருகேசனின் இயக்கத்தை நடிகர் கமலஹாசனே பாராட்டிய நிலையில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சிவக்குமார் முருகேசன் ஒரு படம் இயக்குவதாகவும், அதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.

அந்த படத்திற்கு சேயோன் என தலைப்பு வைத்து பட வேலைகள் துவங்கியது. கடத்த சில மாதங்களாகவே மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.