ETR.FM

'போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்'.

17.11.2026 15:00 1 நிமிட வாசிப்பு
'போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்'.

போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். உலகில் தற்போது அமைதி மட்டுமே தேவை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 23வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில்,''கடந்த சில ஆண்டுகளாக உலகம் அடுத்தடுத்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 

நாடுகளுக்கு இடையே போட்டி தேவை இல்லை, ஒத்துழைப்பே அவசியம். இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இணைந்து உலகின் மக்கள் தொகையில் கால் பங்கைக் கொண்டுள்ளன. 

இன்று, இந்தியாவுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமானச் சேவைகளும், வளர்ந்து வரும் சுற்றுலாவும் நமது உறவு அதிகரித்து வருவதற்கான சான்றுகளாகும்.

நமது பிராந்தியத்தின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் இணைந்து ஒரு புதிய பாதையை வகுக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து, இந்தப் பிராந்தியத்தை அமைதியின் அடையாளமாக மாற்ற முடியும்.''என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்