ETR.FM

தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை - பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு

21.02.2022 17:11 1 நிமிட வாசிப்பு
தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை - பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக நாகை, காரைக்காலை சேர்ந்த 21 மீனவர்கள் கடந்த ஜனவரி 31-ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள்.

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்கரை படையினர் கடந்த மாதம் 31-ம் தேதி கைது செய்தனர். 21 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 21-ம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்றுடன் சிறைக்காவல் முடிந்த நிலையில் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் 21 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாளில் தாயகம் திரும்ப உள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்