ETR.FM

10 ஆண்டுகள் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு சிறை !

01.04.2021 10:39 1 நிமிட வாசிப்பு
10 ஆண்டுகள் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு  சிறை !

டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் செய்ய சதிதிட்டம் தீட்டிய லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஷ்மீர் பகுதியில் செயற்பட்ட பயங்கரவாதிகளான பஹதூர் அலி, மற்றும் அவரது உதவியாளர்களான அபு சாத் , அபு தர்தா ஆகியோர் ஜம்மு – காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள்  ஊடுறுவினர்.

அவர்களில் பஹதூர் அலி கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவரது உதவியாளர்கள் 2017 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பஹதூர் அலிக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்