பிக் பாஸ் 10க்கு வரும் சர்ச்சை பிரபலம்!

30.08.2026 12:00:00

பிக் பாஸ் தொடங்குகிறது என்றாலே அதற்கு பல வாரங்களுக்கு முன்பு இருந்து உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என தகவல்கள் வலம் வர தொடங்கி விடும். போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என பிரபலங்களின் பெயர்கள் அந்த பட்டியலில் கிசுகிசுக்கப்படும். அப்படி கிசுகிசுக்கப்படும் பெயர்களில் பலர் வராமல் போவதும் உண்டு.

   

அப்படி விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 10வது சீசனில் வரவிருக்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது.

பிரபல ஆடை வடிவமைப்பாளரும், செப் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியுமான ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வர இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என அவர் நீதிமன்றம் வரை சென்று போராடி, குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து நிரூபித்து, தற்போது தான் கணவருடன் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவரது குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகவில்லை. சமீபத்தில் தான் குழந்தைக்கு மொட்டை அடித்து இருந்த புகைப்படங்களையும் ஜாய் வெளியிட்டு இருந்தார். ஒரு வயது வயது கூட ஆகாத குழந்தையை விட்டுவிட்டு ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் வருவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.