இந்திய ராணுவ தளபதி இன்று இலங்கைக்கு விஜயம்
12.10.2021 09:04:05
இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (11) இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் இவ்வாறு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல அரசாங்கத் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.