விஜய் சேதுபதியின் ‘பத்தா’ பட முதல் பாடல் வெளியானது!

14.09.2026 07:51:38

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘VJS 56’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மகளே’ வெளியாகியுள்ளது. 

கார்த்திக் நேத்தா வரிகளில், சாய் அபயங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடல் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. 

இந்நிலையில், ‘VJS 56’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.