45 வயதில் பாடகர் நரேஷ் ஐயர் திருமணம்!

15.09.2026 14:41:25

பிரபல பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் பல ஹிட் பாடல்களை பாடி இருப்பவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். 'முன்பே வா என் அன்பே வா' பாடல் தொடங்கி, மெர்சல் படத்தில் வரும் 'மெர்சல் அரசன்' பாடல் வரை அவரது குரலுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

தற்போது 45 வயதாகும் நரேஷ் ஐயர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் இருக்கும் ஐயப்பா விஷ்ணு கோவிலில் அவரது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.