ETR.FM

பிக்பாஸ் 9 புகழ் சுபிக்ஷாவிற்கு அடித்த லக்!

09.03.2026 14:09 1 நிமிட வாசிப்பு
பிக்பாஸ் 9 புகழ் சுபிக்ஷாவிற்கு அடித்த லக்!

சுபிக்ஷா, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவக் குடும்பத்தில் பிறந்தவர் தான் சுபிக்ஷா. தனது தந்தையுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது என பல வேலைகளைச் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருப்பார். மீனவப் பெண்ணாக வலம்வந்த சுபிக்ஷா பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொண்டார். சுபிக்ஷா அந்த விளையாட்டை நன்றாக விளையாடி 90 நாட்களுக்கு மேலாக நிகழ்ச்சியில் இருந்தார்.

Ticket To Finale டாஸ்க்கில் மிகவும் சிறப்பாக விளையாடி மொத்த ரசிகர்கள் மனதையும் வென்றுவிட்டார்.

பிக்பாஸ் மூலம் தமிழக மக்களின் மனதை வென்ற சுபிக்ஷாவிற்கு இப்போது சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது அறிவு என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் இப்போது வெளியாகியுள்ளது, அதைப்பார்த்து ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்