ETR.FM

மகாராஷ்டிரா அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயற்படும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

16.03.2021 08:50 1 நிமிட வாசிப்பு
மகாராஷ்டிரா அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயற்படும் நிலையங்களுக்கு  எச்சரிக்கை!

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் திரையரங்குகள் மற்றும் ஹோட்டல்களை மூட உத்தரவிட நேரிடும் என மகாராஷ்டிர அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கை 3 இலட்சத்து 20 ஆயிரத்தை நெருங்குவதுடன், இறப்பு எண்ணிக்கையும் 11 ஆயிரத்து 500யை கடந்துள்ளது.

இந்நிலையில் இம்மாத இறுதி வரை அதிக கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ள மாநில அரசு, திரையரங்குகள் மற்றும் ஹோட்டல்களில் 50 சதவிகித அளவிற்கே ஆட்களை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் திருமண நிகழ்ச்சியில் 50 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேரும் மட்டுமே பங்கேற்கலாம் எனவும் மகாராஷ்டிரா அரசு  குறிப்பிட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்